என் மலர்
உள்ளூர் செய்திகள்

டி.ஐ.ஜி. முத்துசாமி திடீா் ஆய்வு
- பாணாவரம், அவளூர் காவல் நிலையங்களில் நடந்தது
- வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம் மற்றும் அவளூர் போலீஸ் நிலையங்களில் வேலூா் சரக டி.ஐ.ஜி முத்துசாமி திடீா் ஆய்வு மேற்கொண்டாா் .
இதில்,அங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் குற்ற வழக்குக் கோப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து டி.ஐ.ஜி. நிலுவையில் உள்ள நீண்ட கால வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இரவு ரோந்து பணி மூலம் குற்றங்களை தடுக்க வேண்டும். மனுதார ர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் கண்ணிய மான வார்த்தைகளில் பேச வேண்டும் என்று போலீசாரிடம் அறிவுறுத்தினார். அங்கு பணிபுரிபவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.தொடா்ந்து, பாணாவரம் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிருஷ்அசோக், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ராஜா, மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
அதேபோல அவளூர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்த டி.ஐ.ஜி., பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மணிமாறன்,சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி மற்றும் போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்.






