என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் கலெக்டர் ஆய்வு
- மின்சார கட்டண விவரம் குறித்து விசாரணை
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் உரிமை தொகை பெற விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி வாலாஜா நகராட்சிக்குட்பட்ட கச்சால் நாயக்கர் தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளில் கலெக்டர் வளர்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு ஆகியவற்றை பார்வையிட்டும், குடும்ப ஆண்டு வருமானம், சொந்த நிலம் உள்ளதா, குடும்பத்தில் உள்ள நபர்கள் விவரம், வேலை, கார் உள்பட வாகனம் உள்ளதா, மின்சார கட்டண விவரம் ஆகியவை குறித்து வீடு வீடாக சென்று கலெக்டர் கேட்டறிந்தார்.கலெக்டர் ஆய்வின்போது தாசில்தார் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்க்கரசன் உள்பட வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.






