என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு
    X

    மாணவிகளுடன் கலெக்டர் வளர்மதி பேசிய காட்சி.

    அரசு மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஆய்வு

    • மாணவிகளுடன் ஆலோசனை நடத்தினார்
    • உணவில் காய்கறிகள், கீரைகளை சேர்க்க வேண்டுமென அறிவுரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள சிறுபான்மையினர் நல மற்றும் வாலாஜாவில் உள்ள மிக பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது மாணவிகள் தங்கியுள்ள அறைகள், பயன்படுத்தும் கழிவறைகள், சமையலறைகள், உணவுப் பொருட்களின் இருப்புகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் விடுதி காப்பாளர்களிடம் நாள்தோறும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து கேட்டறிந்து, உணவில் அதிக அளவில் காய்கறிகள், கீரைகளை சேர்க்க வேண்டுமென விடுதி காப்பாளரை கேட்டுக் கொண்டார்.

    இந்த ஆய்வின் போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×