என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் தகுதி, அரசு தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்
- கலெக்டர் தகவல்
- 3 ஆயிரத்து 559 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், இடைநிலை ,பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பும்பொருட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவிக்க உள்ளது.
6 ஆயிரத்து 556 இடைநிலை ஆசிரியர், 3 ஆயிரத்து 587 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்கள், இந்த தேர்வை எழுத இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் என 3 ஆயிரத்து 559 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு வருகிற செப்டம்பர் 17-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் ராணி ப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதி உடையவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.






