search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜா தன்வந்திரி பீடத்தில் ராஜகோபுரம் திருப்பணிக்கு பூமி பூஜை
    X

    வாலாஜா தன்வந்திரி பீடத்தில் ராஜகோபுரம் திருப்பணிக்கு பூமி பூஜை

    • நாளை நடக்கிறது
    • ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தகவல்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை, கீழ்புதுப்பேட்டையில் நோய்கள் தீர்த்து ஆரோக்யம் அருளும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானை, மூலவராக கொண்டு தாய், தந்தையர்க்கு அர்ப்பணிக்கும் விதத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை

    நிர்மாணித்துள்ளார் டாக்டர் முரளிதர ஸ்வாமிகள்.

    இங்கு தினந்தோறும் யாகங்கள், ஹோமங்களும் நடைபெற்று யக்ஞபூமியாக போற்றப்படுகிறது. இங்கு நடைபெறாத யாகங்கள், ஹோமங்களே இல்லை என கூறும் அளவிற்கு நித்ய யாக, ஹோமங்களுக்கான யக்ஞ பீடம் எனலாம் என்ற அளவிற்கு தனிச்சிறப்புடன் தனித்தன்மை வாய்ந்தது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.பல்வேறு தனிச்சிறப்புகளுக்கென்றே பெயர் பெற்ற தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு ராஜகோபுரம் அமைத்திட வேண்டும் என்பதே பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் நெடு நாள் விருப்பமாக இருந்து வந்தது.தற்போது ஸ்ரீ தன்வந்திரி பகவான் அனுக்கிரஹத்தினாலும், தன்வந்திரி குடும்பத்தினர் ஆதரவுடனும் ராஜகோபுரத்தையும் அமைத்திடும் திருப்பபணிக்கு நாளை பூமி பூஜை நடைபெற உள்ளது.

    தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ராஜகோபுரமானது 21அடி அகலம், 31அடி உயரத்தில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரமாக அமைய உள்ளது.இந்த ராஜகோபுரத்திற்கான பூமி பூஜை பங்குனி மாதம் 9ம்தேதி, நாளை மார்ச் 23 ம்தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

    அதை தொடர்ந்து திரளான பெண்கள் பங்கேற்கும் சூக்த பாராயணத்துடன், பல வண்ண மலர்களால் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தன்வந்திரி ஹோமத்துடன் புஷ்பயாகமும் நடைபெற உள்ளது.தெய்வீக அம்சத்துடன் அமைய உள்ள இந்த ராஜகோபுரம் பூமி பூஜைக்கு குருமார்கள், ஆன்மீகஅன்பர்கள், அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×