என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பம்
- கலெக்டர் தகவல்
- 28-ந் தேதி கடைசி நாள்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருநங்கையர்களை ஊக்குவிக்கும் முன்மாதிரி விருதானது ரூ.1,00,000/- காசோலை மற்றும் சான்று ஆகியவற்றுடன் வழங்கப்பட்டு வருகிறது.
விருது
இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் - 28.02.2023, அதற்கான தகுதிகள்:-
திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.
மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி உரிய முறையில் இணையதளம் மூலமாகப் பெறப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.