என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை நகரமன்ற அவசர கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
3 மாதங்களுக்கு ஒரு முறை வார்டு பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும்
- ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம்
- கவுன்சிலர்கள் பங்கேற்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகர மன்ற அவசரக் கூட்டம் அதன் தலைவர் சுஜாதா வினோத் தலைமையில் நேற்று நடைபெற்றது.
துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா நகராட்சி ஆணையாளர் ஏகராஜ்நகராட்சி பொறியாளர் ருத்ரகோட்டி நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன் மேலாளர் தனலட்சுமி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் சட்டம் பிரிவு 24-பி-24-எச் மற்றும் மாநகராட்சிகள் சட்டம் பிரிவுகளின் படியும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் விதிகள் 2022 படியும் வார்டு குழு மற்றும் பகுதி சபா குறித்து வெளியிடப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை நிலை எண்கள் 92 மற்றும் 93 நாள் 24-6-2002 மற்றும் தமிழ்நாடு அரசு 358 நாள் 24-6-2022 மன்றத்தின் பார்வைக்கும் பதிவுக்கும் பொருள் வைக்கப்பட்டு ஒவ்வொரு வார்டையும் வார்டுக்குழு மற்றும் பகுதி சபா உருவாக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு வார்ட்டு குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர் ஆவார்.இதனைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை வார்டு பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும். உட்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை திமுக உறுப்பினர்கள் அப்துல்லா, கிருஷ்ணன், வினோத், குமார் உள்ளிட்டோர் மற்றும் திமுக பெண் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.ஆனால் அதிமுக உறுப்பினர்கள் கே பி சந்தோஷ், ஜோதி மற்றும் 2 அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள்.மேலும் வார்டுகளில் உள்ள குறைகள் குறித்தும் பேசினார்கள்.






