என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீடுகளில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்த காட்சி.
2 வீடுகளில் 28 பவுன் நகை, ரூ.8 லட்சம் கொள்ளை
- தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரபீக் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய வீரன் (வயது 54), எல்ஐசி அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
ஆரணி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் குடும்பத்துடன் சென்றார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பக்கத்து வீட்டுக்காரர்கள் போன் செய்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகை, 5 லட்ச ரூபாய் ரொக்க பணம், 200 கிராம் வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
அதே பகுதியை சேர்ந்தவர் ஷாநவாஸ் (36) இவர் மனைவி சாஜிதா.தனது குழந்தைகளுடன் சோளிங்கர் கொடைக்கல் பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.
இவரது வீட்டில் பூட்டை உடைத்த கும்பல் உள்ளே புகுந்தனர். பெட்ரூமில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்து 17 சவரன் தங்க நகைகள், 3லட்ச ரூபாய் ரொக்க பணம், 1 கிலோ 200 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இரு வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






