search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 1200 பேர் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி
    X

    பரதநாட்டிய கலைஞர்கள், மாணவிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.

    தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 1200 பேர் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி

    • அமைச்சர் ஆர்.காந்தி சான்றிதழ் வழங்கினார்
    • நாளை விபூதி அபிஷேகம் நடைபெறுகிறது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். முரளிதர சுவாமிகளின் 63வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும் 64 நாட்கள் சிறப்பு ஹோம பூஜைகள் , அபிஷேக, ஆராதனை களும்,64 நாட்கள் பரதநாட்டிய கலைஞர்கள் ,மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 1200 பரதநாட்டிய கலைஞர்கள், மாணவிகள் பங்கேற்கும் நாட்டிய மஹோத்சவம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்த நாட்டிய மஹோத்சவ நிகழ்ச்சியில் பரத நாட்டிய கலைஞர்கள், மாணவிகள் என 1200 பேர் பங்கேற்று பரத நாட்டிய கலைஞர் ஷன்மதி ஒருங்கிணைப்பில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நாட்டிய நிகழ்ச்சியை பார்வையிட்டு பரத நாட்டிய கலைஞர்கள் , மாணவிகளுக்கு சான்றி தழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர். பாலாஜி நந்தகோபால், பெங்களூர் ஹெல்த் ப்ளஸ் மருத்துவ மனை டாக்டர்.பரசுராமன், வக்கீல் மோகனமுரளி, சென்னை சந்திரசேகர செட்டி, ஆடிட்டர் தேவராஜன் , வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், பா.ம.க. மாவட்ட செயலாளர் சரவணன், வக்கீல்கள் சங்கர், ஜானகிராமன், ஒன்றிய குழு உறுப்பினர் வேலாயுதம், நகர மன்ற உறுப்பினர் முரளி ஆகியோர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 1200 பரத நாட்டிய கலைஞர்கள், மாணவிகள் பங்கேற்று நடத்திய இந்த நாட்டிய நிகழ்ச்சிக்காக தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நாட்டிய மஹோத்சவ நிகழ்ச்சியை முன்னிட்டு வந்த பக்தர்கள், பொது மக்களுக்கு பீடாதிபதி.டாக்டர். முரளிதர ஸ்வாமிகள் ஆசியும், பிரசாதமும் வழங்கினார். முன்னதாக அன்னதானமும் வழங்கப்பட்டது.

    மேலும் நாளை 5-ந் தேதி பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 64 பைரவர் யாகமும், அஷ்ட கால மகா பைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேகமும் நடைபெறுகிறது.

    பைரவர் ஜெயந்தி விழாவிற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×