search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை-நவாஸ்கனி எம்.பி. குற்றச்சாட்டு
    X

    நவாஸ்கனி எம்.பி.

    மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை-நவாஸ்கனி எம்.பி. குற்றச்சாட்டு

    • மீனவர்கள் வாழ்வாதார பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை என நவாஸ்கனி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
    • கடந்த 8 ஆண்டுகளில் அந்த பன்முக தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான நவாஸ்கனி பேசியதாவது:-

    பா.ஜனதா ஆட்சி நடைபெறாத தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கவர்னர்களின் மூலம் மத்திய அரசு ஒருவித அழுத்தத்தை மாநில அரசுகளுக்கு கொடுக்க முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.

    இதனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் கவர்னர்களுக்கு வலியுறுத்தல்களை வழங்க வேண்டும். நாம் காலம் காலமாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக நம்முடைய நாட்டை உலக அரங்கில் உயர்த்தி வைத்துள்ளோம்.

    ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் அந்த பன்முக தன்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு மத்திய அரசு 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம்' என்று பன்முகத்தன்மைக்கு எதிரான மிகப்பெரிய விவாதத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.

    பன்முகத்தன்மை உள்ள இறையாண்மை மிக்கது நம்முடைய தேசம். இது சுதந்திரநாடு ஜனநாயக நாடு. இங்கு மக்கள்தான் எஜமானர்கள் அவர்கள் மீது எதையும் எவரும் திணிக்கவோ, வற்புறுத்தவோ முடியாது.

    எங்களுக்கு ஒன்றை வேண்டாம் என்று கூறும்போது, அதனை திணிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. அதுதான் சுதந்திர தேசத்தின் அடிப்படை உரிமை.

    ஒருவர் இந்த மொழியில் தான் பேசவேண்டும், இந்த உணவைத்தான் உண்ண வேண்டும், இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்று திணிப்பது சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    உலக நாடுகளுக்கு மத்தியில் நம்முடைய நாடு பெருமிதத்தோடு உயர்ந்து நிற்பது நமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிதான். ஆனால் அண்டையில் இருக்கும் நம்மை விட மிக மிக சிறிய நாடு இலங்கையிடம் இருந்து நம்முடைய மீனவர்களை காப்பதற்கு இன்னாள் வரை ஒரு நிரந்தர தீர்வை காண முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம் என்ற உண்மையையும் இந்த அரசு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பலமுறை இதே அவையில் பேசியிருக்கிறேன். தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். எங்களுடைய பகுதிகளின் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையி னரால் தாக்கப்பட்டு வருகி றார்கள். அவர்களின் படகுகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்து நிற்கும் சூழலுக்கு தள்ளப்படு கிறார்கள். இன்று நீங்கள் எங்களுக்கு பதில் உரைக்க மறுத்தாலும் இன்னும் 1½ ஆண்டு காலத்தில் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தொடர்ந்து 2முறை உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கிய மக்களை மீண்டும் ஒருமுறை நீங்கள் சந்திக்க வேண்டும். அப்போது அவர்கள் உங்களுக்கு தகுந்த பதிலை வழங்குவார்கள்.

    வார்த்தையில் மட்டுமல்ல செயலிலும் உங்களுடைய வளர்ச்சியை காட்டுங்கள் என்பதை வலியுறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×