என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டல்களில் அதிரடி ஆய்வு நடத்தி கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்
    X

    அதிகாரிகள் ஓட்டல்களில் ஆய்வு நடத்தி கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.

    ஓட்டல்களில் அதிரடி ஆய்வு நடத்தி கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்

    • ஓட்டல்களில் அதிரடி ஆய்வு நடத்தி கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • ஏழு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ. 6ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப் பட்டது.

    ராமநாதபுரம்

    நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் கடந்த 16-ந்தேதி இரவு அசைவ உணவு சவர்மா சாப்பிட்டோ ருக்கு வாந்தி, வயிற்று போக்கு, வயிற்று வலி ஏற்பட்டது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர். இதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

    இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அசைவ உணவு கடைகள், ஓட்டல்களில் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு ஆணையர் லால்வேனா உத்தரவிட்டார்.

    இதனடிப்படையில் ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தல் படி, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் ஆலோசனை யின்பேரில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை ஆகிய இடங்களில் உள்ள அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    கீழக்கரை கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பொறித்த சிக்கன் 4½ கிலோ, நிறுவன பெயர், தயாரிப்பு, காலாவதி தேதி வில்லை ஒட்டப்படாத உணவு 2 கிலோ, அதிக நிறமி சேர்க்கப்பட்டு தயாரான சட்னி வகைகளை பறிமுதல் செய்து அழித்தனர். இது தொடர்பாக 3 கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    ராமநாதபுரம் நகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் சவர்மா கடைகள் ஆய்வு செய்யப் பட்டது. ஆய்வின் போது கருகிப் போன சிக்கன், சரியாக வேகாத சிக்கன்கள் சுமார் 6.5 கிலோ, பிளாஸ்டிக் 42 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ஏழு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ. 6ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப் பட்டது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் பஸ் நிலையம் மேல வீதி, வர்த்தகன் தெரு, நடுத்தெரு போன்ற பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லிங்கவேல் தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவு தயாரிக்கும் சமையலறையில் விற்ப னைக்கு வைக்கப்பட்டிருந்த பழைய பொறித்த சிக்கன் வகைகள் சுமார் 10 கிலோ கைப்பற்றி அழித்தனர்.

    மேலும் சுகாதாரமற்ற முறையில் பொதுமக்கள் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்தத குற்றத்திற்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தி னர். மேலும் புகார்கள் வந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். உணவு தயாரிக்கும் பொருட்களை பாதுகாப்புடன் வைத்து கொள்ள வேண்டும். கோழிக்கறிகளை அன்றைய தினம் வாங்கி உணவுக்கு பயன்படுத்த வேண்டும் நோட்டீஸ் வழங்கினர்.

    Next Story
    ×