என் மலர்
உள்ளூர் செய்திகள்

எட்டிவயல் கிராமத்தில் பொதுமக்களிடம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் குறைகளை கேட்டறிந்தார்.
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
- எட்டிவயல் கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.
- தங்களுக்குத் தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர் களை அணுகி பயன்பெற வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டி வயல் கிராமத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கிறதா? என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் நேரம், பொருட்கள் தரமாக உள்ளதா? சீராக கிடைக்கப் பெறுகிறதா? எனவும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், குறிப்பாக மகளிர் பொரு ளாதார ரீதியாக பயன்பெ றும் வகையில் மானி யத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டு சுயதொழில் புரிந்திடும் வகையில் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.
வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு வேளாண் உபகரணங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. தங்களுக்குத் தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர் களை அணுகி பயன்பெற வேண்டும்.
மேலும் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதால் தங்கள் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ளவும், சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சிவசாமி, எட்டிவயல் ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






