search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டக்கிளை மாநாடு
    X

    கமுதியில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க வட்டக்கிளை மாநாட்டை முன்னிட்டு நடைபெற்ற பேரணியை வட்டாட்சியர் சேதுராமன் தொடங்கி வைத்தார்.

    வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டக்கிளை மாநாடு

    • வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டக்கிளை மாநாடு கமுதியில் நடந்தது.
    • விழா முடிவில் வட்ட கிளை செயலாளர் மங்களேஸ்வரன் நன்றி கூறினார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழ்நாடு வரு வாய்துறை அலுவலர் சங் கத்தின் வைர விழா ஆண்டை முன்னிட்டு, வட் டளை மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பழனி குமார் தலைமை தாங்கி வை ரவிழா கல்வெட்டை திறந்து கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

    பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பேர ணியாக விழா நடக்கும் தனியார் திருமண மண்டபத் திற்கு சென்றனர். இந்தப் பேரணியை கமுதி வட்டாட் சியர் சேதுராமன் சங்க கொடி கோஷமிட்டு துவக்கி வைத்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அம லோற்பவ ஜெயராணி மறங றும் மண்டல துணை வட் டாட்சியர் வெங்கடேஸ்வ ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டக்கிளை தலைவர் செந்தில்முருகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜமால் முகமது உட்பட அனைத்து மாவட்ட நிர்வா கிகளும் கலந்து கொண்ட னர். மேலும் துணை வட்டார வளர்ச்சி அலு வலர் பரம சிவம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் சங்க கமுதி வட்டக்களை தலைவர் செந்தூர்பாண்டி, செயலாளர் தாமரைக் கண்ணன், கிராம உதவியாளர் சங்க கமுதி வட்டக் கிளை தலைவர் அரியப்பன், செயலாளர் உக்கிரபாண்டி யன், தலைமை நில அலுவலர் நாகவள்ளி, கிராம நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் நிர்வாகி பால சுப்பிரமணியன் மற்றும் மாவட்டத்தின் அனைத்து வட்டக்கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில், புதிய ஓய்வூ திய திட்டத்தை கைவிட்டு பழைய ஒய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும், தேர்தல் அறிவிப்பின்போது அனைத்து செலவினங்களை யும் வழங்கிட வேண்டும், வருவாய்த் துறையின் பழுதடைந்துள்ள வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வழங்கப்பட வேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநாட்டிற்கான ஏற்பாடுகளை வட்டாட்சியர் சேது ராமன் ஆலோசனையின் படி வருவாய் அலுவலர் சங்க கமுதி வட்ட கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். விழா முடிவில் வட்டக்கிளை செயலாளர் மங்களேஸ்வரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×