search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கரை பஸ் நிலையத்திற்கு புறநகர் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    X

    கீழக்கரை பஸ் நிலையத்திற்கு புறநகர் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    • கீழக்கரை பஸ் நிலையத்திற்கு புறநகர் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை நகரில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கீழக்கரை வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இவைகளில் புறநகர் பஸ்கள் திருநெல்வேலி டெப்போ, தூத்துக்குடி டெப்போ, கன்னியாகுமரி டெப்போ கும்பகோணம் டெப்போ நாகப்பட்டினம் டெப்போ உள்ளிட்ட புறநகர் பஸ்கள் கீழக்கரை நகருக்குள் உள்ள பஸ் நிலையத்திற்கு வராமல் ஏர்வாடி முக்கு ரோடு வழியாக சென்று விடுகின்றன.

    இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிக்கு செல்ல வேண்டிய மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற னர்.

    முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே அனைத்து பஸ்கள் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம் கூறுகையில், இந்த பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நகரில் உள்ள பஸ் நிலை யத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களையும் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×