search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1001 தீப்பந்தங்களுடன் முத்தாலம்மன் ஊர்வலம்
    X

    முத்தாலம்மன் ஊர்வலத்தில் தீப்பந்தங்களுடன் பங்கேற்ற கிராம மக்கள்.

    1001 தீப்பந்தங்களுடன் முத்தாலம்மன் ஊர்வலம்

    • 1001 தீப்பந்தங்களுடன் முத்தாலம்மன் ஊர்வலம் நடந்தது.
    • களி மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை கிராமத்தின் எல்லையில் வைத்து உடைத்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நாராயணபுரம் மற்றும் கல்லுபட்டி கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக இருந்து வரும் முத்தாலம்மனுக்கு பாரம்ப ரிய முறைப்படி முத்தா லம்மன் சிலை எடுப்பு திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    முன்னதாக திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் தொடங்கி யது. இக் கிராமத்து மக்கள் பிடிமண் எடுத்து ஊர்வலமாக சென்று, சிலை செய்யும் இடத்தில் அம்மன் சிலை செய்வதற்கு பிடிமண்ணை கொ டுத்தனர். பின்னர் சிலை செய்யபட்டு நேற்று முன்தினம் இரவு முத்தா லம்மன் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முத்தா லம்மன் சிலை எடுப்பு திருவிழாவில், 2கிராமத்து இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் 1001 தீ பந்தங்கள் ஏந்தி, முத்தா லம்மன் சிலை செய்யப்பட்ட கண்ணார்பட்டியில் இருந்து அம்மன் கண்ணை கட்டி ஊர்வலமாக, கமுதி பஸ் நிலையம் வழியாக மேள தாளம் வான வேடிக்கை யுடன், நாராயணபுரம் கொண்டு சென்றனர்.

    பின்னர் மாலை களி மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை கிராமத்தின் எல்லையில் வைத்து உடைத்தனர்.

    நாகரீக காலத்தில் மின் சீரியல் விளக்குகள், அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள் இருந்தாலும் பாரம்பரியம் மாறாமல் நாராயணபுரம், கல்லுபட்டி கிராமமக்கள் இன்னும் பழைய பழக்கத்தை மாற்றாமல் முத்தாலம்மன் திருவிழாவை தீ பந்தம், மேளம், வானவேடிக்கை களோடு கொண்டாடி வருகின்றனர்.

    Next Story
    ×