என் மலர்
உள்ளூர் செய்திகள்

செய்யது ஹமீதா கல்லூரி முதலிடம்
- பல்கலைக்கழக அளவிலான கூடைப்பந்து போட்டியில் செய்யது ஹமீதா கல்லூரி முதலிடம் பெற்றது.
- கீழக்கரை அணி 43-23 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.
கீழக்கரை,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழம் மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே 2022-23-ம் ஆண்டிற்கான கூடைப்பந்து போட்டி தேவகோட்டையில் நடந்தது.
இதில் 22-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த கூடைப்பந்து அணிகள் பங்கேற்றன. போட்டிகளை அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இறுதிப் போட்டியில் கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரி அணியும், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி அணியும் மோதியது. இதில் கீழக்கரை அணி 43-23 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.
முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப், செயலர் ஷர்மிளா, இயக்குநர்கள், முதல்வர் சதக்கத்துல்லா, உடற்கல்வி இயக்குநர் தவசலிங்கம் ஆகியோர் கூடைப்பந்து அணியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story






