search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர் காப்பீடு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை
    X

    பயிர் காப்பீடு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

    • ராமநாதபுரத்தில் பயிர் காப்பீடு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தற்போது நிலங்களில் களை எடுத்தல், உரமிடுதல் பணி நடக்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட் டத்தில் மானாவாரியாக 1 லட்சத்து 28 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. நெல் சாகுபடி பணிகள் தொடங்கி உள் ளது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு தொகை வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப் பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.

    இதில் காப்பீடு செய்ய நாளை 15-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட தால் விவசாயிகள் ஆதார் அட்டை, கணிப்பொறி சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவைகளை தயார் செய்து காப்பீடு பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவசாயி கள் கூறுகையில், மூவிதழ் அடங்கல் வி.ஏ.ஓ. க்களிடம் வாங்க வேண்டும்.பெரும் பாலான வி.ஏ.ஓ.க்கள் வாடகை அறையில் தங்கி உள்ளனர். இதனால் வி.ஏ.ஓ.க்களை தேடி கண்டு பிடிப்பதில் விவசாயி களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மொபைலில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    தற்போது நிலங்களில் களை எடுத்தல், உரமிடுதல் பணி நடக்கிறது. அதற்கான பணியிலும் ஈடுபட முடியாமல் வி.ஏ.ஓ., வை தேடுவதில் நேரம் வீணாகிறது. சர்வர் பாதிப்பு, தீபாவளி பண்டிகைக்கு தொடர் அரசு விடுமுறை என பல்வேறு காரணங்க ளால் ஏராளமான விவசாயி கள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

    எனவே இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்யும் தேதியை நீட்டிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×