search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கலெக்டர் பாராட்டு
    X

    தாதனேந்தல் ஊராட்சியில் கீரை விற்பனையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ெதாடங்கி வைத்தார்.

    மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கலெக்டர் பாராட்டு

    • தாதனேந்தல் ஊராட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்களை ராமநாதபுரம் கலெக்டர் நேரில் சென்று பாராட்டினார்.
    • மகளிர் குழுவை போல் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப உற்பத்தி பொருள்களை தயாரித்து விற்பனை செய்யலாம் என்றும் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் பண்ணை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கீரை வகைகளை பொது மக்களுக்கான விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்து மகளிர் குழுவினை பாராட்டி இக்குழுவில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறியதாவது:-

    மகளிர் குழுவினர் ஒவ்வொரு ஊராட்சிகளும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் இருக்கும்போது பார்த்துவிட்டு பணிகள் இல்லாத இடைப்பட்ட காலங்களில் இது போல் சுய தொழில்கள் தொடங்கிட வேண்டும். நிலையான வருமானம் என்பதை நம்மால் உருவாக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் மக்களின் தேவைகள் அதிகரிக்கும் வண்ணம் இருந்து வருகின்றன. அதை இருந்த இடத்திலிருந்து வழங்கும் வகையில் திட்டமிட்டு செயல்படலாம். தாதனேந்தல் இணைந்த கைகள் மகளிர் குழுவை போல் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப உற்பத்தி பொருள்களை தயாரித்து விற்பனை செய்யலாம்.

    அதுமட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலாத்தலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்க தாகும். கலை வண்ணப்பொருட்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×