என் மலர்
உள்ளூர் செய்திகள்

நயினார் கோவிலில் படித்துறை கட்ட பூமி பூஜை
- நயினார் கோவிலில் படித்துறை கட்ட பூமி பூஜை நடந்தது.
- இதில் ஒன்றிய செயலாளர் சக்தி, முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் மருதவனம் அம்மன் கோவில் குளத்தில் பக்தர்கள் தண்ணீரை பயன்படுத்துவதற்கு படித்துறை இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் அம்மன் கோவில் குளத்திற்கு படித்துறை கட்டி தர வேண்டும் என்று எம்.எல்.ஏ முருகேசனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பரமக்குடி சட்டமன்ற தொகுதி ேமம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடந்தது.
தி.மு.க மாநில தீர்மானக் குழு துணை தலைவர் சுப.த.திவாகரன் தலைமை தாங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் சக்தி, முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story