search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிப்படை எழுத்தறிவு பயிற்சியை அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வேண்டும்-அமைச்சர் பேச்சு
    X

    விழாவில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் பயிற்சி பெற்றவர்களுக்கு வயது வந்தோர் கல்வி திட்ட அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்கினர். அருகில் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் உள்ளனர்.

    அடிப்படை எழுத்தறிவு பயிற்சியை அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வேண்டும்-அமைச்சர் பேச்சு

    • அடிப்படை எழுத்தறிவு பயிற்சியை அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
    • ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனை தொடக்க விழா முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டம் மூலம் அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சிப் பணிமனை தொடக்க விழா கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், ஒரு காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வித்தரத்தில் மிகவும் குறைந்து இருந்தது. இப்பொழுது மாவட்டத்தின் வளர்ச்சி, கல்வியறிவு என அனைத்திலும் முதலிடம் பெறுவதற்கு முதலமைச்சர் வேண்டிய வசதிகளை செய்து தருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. அதை நிவர்த்தி செய்வதற்கு முதலமைச்சர் உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு என ரூ.587 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தவர்கள், அப்படி என்றால் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பிலாமல் வேலைக்கு செல்பவர்கள், கிராமப்பகுதிகளில் உள்ள எழுத படிக்க தெரியாத பெரியவர்கள் என உள்ள அனைவருக்கும் எழுத படிக்க சொல்லி கொடுத்து அவர்களது பெயரை கூட கையொப்பம் இடும் அளவிற்கு படிக்க சொல்லி கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    கடந்த ஆண்டு சுமார் 3.10 லட்சம் பேருக்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் என இலக்கும் அதற்கான பயிற்சியையும் வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். இன்றைக்கு எங்களது முழு முயற்சியின் காரணமாக 3.10 லட்சம் பேரில் இருந்து 3.19 லட்சம் பேருக்கு எழுத படிக்க சொல்லி கொடுத்து உயர்த்திக் காட்டி உள்ளோம்.

    இதுபோன்ற தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிசாரா குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களுக்கான இந்த பயிற்சியை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்த வேண்டும். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் குப்புசாமி, இணை இயக்குநர் அமுதவல்லி, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திசைவீரன், திருப்புல்லாணி ஒன்றியக் குழுத்தலைவர் புல்லாணி, மாயாகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×