search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    34-வது விளையாட்டு விழா
    X

    விளையாட்டு விழா



    34-வது விளையாட்டு விழா

    • கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் 34-வது விளையாட்டு விழா நடந்தது.
    • ஆமினா பர்வீன் ஹக்கீம் இறைவணக்கம் பாடினார்.

    கீழக்கரை

    கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 34-வது விளையாட்டு விழா மூன்றாமாண்டு மாணவி பி.ஏ. (ஆங்கிலம்) ஆமினா பர்வீன் ஹக்கீம் இறைவணக்கத்துடன் தொடங்கியது. முதல்வர் சுமையா வரவேற்றார்.

    ராமநாதபுர மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் சேக் மன்சூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். ராமநாதபுர மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, ஒலிம்பிக் கொடியையும், கல்லூரியின் செயலாளர் காலித் ஏ.கே புஹாரி கல்லூரிக் கொடியையும் ஏற்றினர். பின்னர் மாணவியரின் அணி வகுப்பு நடைபெற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100, 200, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், சாகசங்கள், யோகாசனங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விளையாட்டு தின விழா அறிக்கையினை உதவி பேராசிரியர் சீனி ரக்பு நிஷா வாசித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேலும் இவ்விழாவில் சர்வதேச அளவில் நடைபெற்ற இந்தோ நேபாளம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். மாணவியர் பேரவையின் விளையாட்டுச் செயலர் முஜாஹித் ஜசீரா நன்றி கூறினார்.

    இவ்விழாவில் சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக் தாவூத் கான், கல்லூரியின் ஆராய்ச்சி இயக்குநர் இர்பான் அஹமது மற்றும் பல்வேறு துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும், மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×