search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் நீதிமன்றத்தில்  ரூ.2.78 கோடி தீர்வு தொகையாக அறிவிப்பு
    X

    மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான விஜயா தலைமையில் நடந்தது.

    மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.78 கோடி தீர்வு தொகையாக அறிவிப்பு

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.78 கோடி தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.
    • 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

    ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான விஜயா தலைமை வகித்தார்.

    இதில் எடுத்துக்கொண்ட 337 வழக்குகளில் 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. ரூ.2 கோடியை 78 ஆயிரம் தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.

    நிரந்தர மக்கள் மன்ற மாவட்ட நீதிபதி பரணிதரன், மகிளா கோர்ட்டு மாவட்ட நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர்கள் பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா, வழக்க றிஞர் சங்க பொருளாளர் பாபு, இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×