search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்
    X

     கோடுஅள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்

    • மீண்டும் மஞ்சப்பை என்பதை நினைவில் கொண்டு துணிப்பைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.
    • பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி ஊராட்சி ஒன்றியம், கோடுஅள்ளி ஊராட்சியில்உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசும்போது தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கும், படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த "அனைவருக்கும் இ-சேவை மையம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைத்து நடத்திட ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பைகளை முற்றிலும் பயன்படுத்தக்கூடாது. வெளியில் கழிவுநீர் ஓடைகளிலோ அல்லது பொது இடங்களிலோ குப்பைகளை கொட்டுவது, நெகிழிப்ப்பைகளை தூக்கி எறிவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. கடைகளுக்கு பொருள்கள் வாங்கச் செல்லும் போது மீண்டும் மஞ்சப்பை என்பதை நினைவில் கொண்டு துணிப்பைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.

    மழைநீர் சேமிப்பு இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து மழைநீர் சேகரிப்பதன் மூலம் மண்வளம் மேம்படுவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயரும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் தருமபுரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹி முகம்மது நசீர், தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×