என் மலர்
உள்ளூர் செய்திகள்

வால்டாக்ஸ் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்- பொதுமக்கள் அவதி
- சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் மழைநீர் செல்ல வழியில்லாததால் சாலையில் குளம்போல் தேங்கியது
- மிதமான மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு பலத்த மழை கொட்டி வருகிறது. இன்று காலை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் மழைநீர் செல்ல வழியில்லாததால் சாலையில் குளம்போல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மிதமான மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேபோல் அதே பகுதியில் சில தெருக்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.
Next Story






