என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை முன் தேங்கிய மழை நீர்: வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை
- 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
- பொதுமக்கள் தண்ணீரில் நின்றபடி ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் நியாய விலை கடையில் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
தற்போது பருவமழை தொடங்கி மழை பெய்து வருவதால், இந்த நியாய விலை கடையை சுற்றிலும் மழைநீர் தேங்கி வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள் தண்ணீரில் நின்றபடி ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






