என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் அமைக்க ரெயில்வே மந்திரி ஒப்புதல்-செல்லகுமார் எம்.பி.தகவல்
    X

    ஓசூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் அமைக்க ரெயில்வே மந்திரி ஒப்புதல்-செல்லகுமார் எம்.பி.தகவல்

    • நாகதோனை ரெயில் நிலையம் பகுதியில், குழந்தைகள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையில் கடந்து பள்ளிக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது.
    • ரெயில்வே மந்திரி, மேம்பாலங்கள் அமைக்க உரிய சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - தேன்கனிக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே ரெயில்வே துறையில் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கீழ்மை பாலம் குறுகிய நிலையில் இருப்பதால் அந்தப் பகுதியில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இதற்கு தீர்வு காணுமாறு, பல முறை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஓசூரில் அந்தப் பகுதிகளை கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி டாக்டர் செல்லகுமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓசூர், மத்திகிரி வழியாக தேன்கனிக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை குறுக்கே தற்போது உள்ள குறுகிய கீழ்மை பாலம் காரணமாக மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது, தொடர்கதையாகி வருகிறது. எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என நாடாளுமன்றத்திலும் மற்றும் மத்திய ரெயில்வே மந்திரியிடமும் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய ரெயில்வே அமைச்சகம் இந்த பகுதியில் பயன்பாட்டில் உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்தி இரு வழி பாதை கீழ்மை பாலமாக அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

    மேலும், பெரிய நாகதோனை ரெயில் நிலையம் பகுதியில், குழந்தைகள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையில் கடந்து பள்ளிக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சென்று வருவதற்கும் கூட மிகுந்த அவதிக்கு ஆளாகி வருவதால், இந்த இருப்புப் பாதை பகுதியில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை பற்றி,

    ரெயில்வே அமைச்சகத்திடம் எடுத்துக் கூறி இந்த பகுதியில் குறைந்தபட்சம் லகு ரக வாகனங்கள் சென்று வரும் அளவிற்காகவாவது மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதனையும் பரிசீலனை செய்த ரெயில்வே மந்திரி, இதற்கான உரிய சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    எனவே, இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் சீராகி, பொதுமக்கள் சிரமமின்றி இருப்புப் பாதையை கடக்க முடியும். இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். இந்த ஆய்வின்போது, காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×