search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலை உயர்வால் முள்ளங்கி விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    விலை உயர்வால் முள்ளங்கி விவசாயிகள் மகிழ்ச்சி

    • உழவர் சந்தையில் கிலோ முள்ளங்கி 20 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
    • முள்ளங்கி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப் பட்டி, அரூர், காரிமங்கலம் என 7 வட்டங்களிலும் விவசாயிகள் அதிக படியாக முள்ளங்கி பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

    விதை ஊன்றிய நாளில் இருந்து 45 நாட்களில் முள்ளங்கியை அறுவடை செய்கின்றனர். குறுகிய காலத்தில் அதிக வருமானம் கொடுக்கும் பயிர் என்பதாலும், உரம் உரியா மருந்து செலவினங்கள் குறைவு என்பதாலும் காய்கறி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் தங்கள் வயலில் சிறு பரப்பளவிலாவது முள்ளங்கியை நடவு செய்து லாபத்தை ஈட்டி வருகின்றனர்.

    காரிமங்கலம், பாலக்கோடு, புலிக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுமுழுக்க விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக உழவர் சந்தைகளில் ஒரு கிலோ முள்ளங்கி விலை ரூ.4 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை வீழ்ச்சியால் முள்ளங்கி விவசாயிகள் வேதனை அடைந்தனர். மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் பனி காலத்தில் முள்ளங்கி நடவு செய்து விவசாயிகள் நல்ல விளைச்சலை எடுத்து வருகின்றனர்.

    கிழங்கு நீளமாகவும், திரட்சியாகவும் வளரும் பராமரிப்பும் குறைவு என்பதால் இந்த தருணத்தில் விவசாயிகள் பலரும் முள்ளங்கி சாகுபடியில் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக பரப்பில் முள்ளங்கி சாகுபடி நடப்பதாலும் சந்தைக்கு கிழங்கு வரத்து அதிகரிப்ப தாலும் விலை சரிவடைந்து விடுகிறது.

    தற்பொழுது கோடை காலம் என்பதால் நீர் பற்றாக்குறையால் விவசாயிகள் முள்ளங்கி அதிக அளவு பயிரிடுவதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.

    கிணற்று பாசனம் ஆழ்துளை கிணற்று பாசனம் உள்ளவர்கள் தொடர்ந்து முள்ளங்கி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சந்தைக்கு முள்ளங்கி வரத்து குறைவாக உள்ளதால் தற்பொழுது முள்ளங்கி விலை உயர்ந்து விவசாயிகளிடத்தில் வியாபாரிகள் கிலோ 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இன்று உழவர் சந்தையில் கிலோ முள்ளங்கி 20 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×