என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பையனூர் விநாயகா மிஷன் கல்லூரியில் கதிரியக்க கருத்தரங்கம்: 600 பேர் பங்கேற்பு
    X

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது

    பையனூர் விநாயகா மிஷன் கல்லூரியில் கதிரியக்க கருத்தரங்கம்: 600 பேர் பங்கேற்பு

    • மாணவர்களுக்கு வினா, விடை, ஆராய்ச்சி கட்டுரை, படவிளக்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
    • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இந்திய கதிரியக்கவியலாளர் சங்கத்தின் தலைவர் முனிரத்தினம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள விநாயகா மிஷன் பல்கலைக்கழக அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் "கதிரியக்கம் பிரிவில் மாற்றம் ஏற்படுத்துதல்" என்ற தலைப்பில் சர்வதேச கதிரியக்கவியல் தேசிய கருத்தரங்கம் துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது., இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், டெக்னிஷியன்கள் என 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மாணவர்களுக்கு வினா, விடை, ஆராய்ச்சி கட்டுரை, படவிளக்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இந்திய கதிரியக்கவியலாளர் சங்கத்தின் தலைவர் முனிரத்தினம், பொது செயலாளர் மாரிமுத்து, சேலம் காவேரி மருத்துவமனை கதிரியக்க ஆலோசகர் டாக்டர் சந்தோஷ்குமார், சாய்கிரன், துளசிதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்., துறையின் பேராசிரியை கலைவாணி, இன்பசாகர், ஆண்டனிரூபன், நிகிதா, சகினா, ஜஸ்வன்தினி ஆகியோர் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×