search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  9 ஆசிரியர்களுக்கு  ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: மாவட்ட கலெக்டர் பாராட்டு
    X

     கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: மாவட்ட கலெக்டர் பாராட்டு

    • நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வருகிறது.
    • கலைவாணர் அரங்கில் கடந்த 5- ந் தேதி நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 5- ந் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களில் சித்தலூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், தேவ பாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி, வடதொ ரசலூர் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் துரைசாமி, திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் வில்வபதி ஆகியோரும், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளிலிருந்து கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, கச்சிராயபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி, நைனாக்கு ப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், சின்னமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகிய ஆசிரியர்களுக்கும், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து உளுந்தூர்பேட்டை சாரதா வித்யாலயா பள்ளி முதல்வர் சந்திரா என 9 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ராதா கிருஷ்ணன் விருதுகளை வழங்கி, வெள்ளிப் பதக்கம் அணிவித்து தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கி கவு ரவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, இவ்விருது பெற்ற கள்ள க்குறிச்சி மாவட்ட த்தைச் சேர்ந்த 9 ஆசிரியர்களும் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்கு மாரை நேரில் சந்தித்து சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ண ப்பிரியா, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ஆரோக்கியசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஜோதிமணி, மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) துரைராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×