என் மலர்
உள்ளூர் செய்திகள்

மலைச்சாலையில் உள்ள ஆபத்தான கொண்டை ஊசி வளைவு.
ஒட்டன்சத்திரம் அருகே மலைச்சாலையில் விபத்தை தடுக்க குவிலென்ஸ் பொருத்த வேண்டும்
- ஒட்டன்சத்திரத்தில் இருந்து கே.சி.பட்டி வரை 42 கி.மீ தூரம் உள்ள சாலையில் பல கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலை மேல் வாகனங்களில் செல்பவர்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாததால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
- மலைச்சாலையில் குவிலென்ஸ் கண்ணாடி பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மலைப்பகுதி கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஒட்டன்சத்திரம்:
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட மலைப் பகுதிகளுக்கான சாலைகளில் கொண்டை ஊசி வளைவு காணலாம். வாகனங்களால் செங்குத்தாக மலையின் மீது முன்னேறிச் செல்ல இயலாத காரணத்தால் கொண்டை ஊசி வளைவுகள் மலைப் பயணங்களில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகும். தொடர்ச்சியான இத்தகைய வளைவுகள் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படக் காரணமாக அமையலாம்.
கொண்டை ஊசி வளைவு என்பது மலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் வடிவம் ஆகும். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான வடகாடு, பரப்பலாறு அணை, பாச்சலூர், கே.சி.பட்டி வழியாக பெருமாள்மலை சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இதில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து கே.சி.பட்டி வரை 42 கி.மீ தூரம் உள்ள சாலையில் பல கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலை மேல் வாகனங்களில் செல்பவர்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாததால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
இந்த வளைவுகளில் வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், குவிலென்ஸ் கண்ணாடி (கான்வெக்ஸ் மிரர்) பொருத்தினால் விபத்துக்கள் குறைய வாய்ப்பு உண்டு. எனவே மலைச்சாலையில் குவிலென்ஸ் கண்ணாடி பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மலைப்பகுதி கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்






