என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது

    • காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் முடிவடைந்தது.
    • தங்களது வகுப்பு ஆசிரியர், ஆசிரியை களுக்கு நன்றி செலுத்தியும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    சேலம்:

    தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த வாரம் தொடங்கியது. இன்று 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் முடிவடைந்தது.

    பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சி

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் இன்றுடன் தேர்வு அனைத்தும் நிறைவு பெற்றன.இதையடுத்து நாளை முதல் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளியில் துள்ளிக்குதித்து ஆரவாரத்துடன் பள்ளியில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது பள்ளி குழந்தைகள் ஒருவருக்கொருவர் டாட்டா காண்பித்தும், தங்களது வகுப்பு ஆசிரியர், ஆசிரியை களுக்கு நன்றி செலுத்தியும் வீட்டுக்கு புறப்பட்டனர்.6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை முடிந்து அக்டோபர் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம்கட்ட பயிற்சி நடைபெற உள்ளதால் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

    Next Story
    ×