என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் முத்து துரை . இவரது மனைவி திவ்யா (வயது 24). இவர்களுக்கு கிருத்திகா, பிரித்திகா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
திவ்யா அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அயர்ந்து தூங்கினார். இன்று காலை எழுந்து பார்த்த போது திவ்யாவை காணவில்லை. இதையடுத்து முத்து துரை மனைவியை அப்பகுதியில் தேடினார். அப்போது அங்குள்ள மல்லிகை தோட்டத்தில் திவ்யா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திவ்யாவை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திவ்யா இறந்து கிடந்த இடம் அருகே ஒரு செல்போன் கிடந்தது. அதனை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தூர்:
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே கொல்லுப்பட்டியில் உள்ள குளத்தில் கடந்த 19-ந் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார், அந்த பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அந்த பெண், திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணாவளைவு வடக்குத்தெருவை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி பவானி(33) என்பது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை மாத்தூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், பவானியை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது செந்தில் குமார் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனக்கும், பவானிக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. பவானி பட்டதாரி ஆவார். ஆனால் நான் 7-ம் வகுப்பு வரையே படித்துள்ளேன். நான் தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்தேன். பவானி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்தார். இதனால் அவள் என்னை மதிக்கவில்லை. மேலும் என்னுடன் குடும்பம் நடத்தவும் மறுத்தார். மேலும் நான் திக்கித்திக்கி பேசுவதை கேலி செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி கடந்த 18-ந் தேதி மாலை பவானியை கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி, அவரை துவாக்குடியில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் மலைக்குடிப்பட்டிக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்றேன். அப்போது கோவில் பூட்டியிருந்தது.
இதையடுத்து அவரை கொல்லுப்பட்டியில் உள்ள குளக்கரைக்கு அழைத்து சென்றேன். அங்கு அவருடன் உல்லாசமாக இருக்க முயன்றபோது, நான் மது அருந்தியிருப்பதை தெரிந்து கொண்ட பவானி, என்னை தள்ளிவிட்டார். இதனால் பலவந்தமாக அவருடன் உல்லாசமாக இருக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து நான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கயிறை எடுத்து, பவானியின் கழுத்தை சுற்றி இறுக்கினேன். இதில் அவர் இறந்தார். பின்னர் பவானியின் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றிக்கொண்டு, ஸ்கூட்டரில் நான் வீட்டிற்கு வந்து விட்டேன். அப்போது வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்ததால், எனது அறைக்கு சென்று படுத்துக்கொண்டேன். காலையில் எனது தாய், என்னிடம் பவானி எங்கே என்று கேட்டபோது, தாலியை வீட்டில் கழற்றி வைத்து விட்டு எங்கோ சென்றுவிட்டதாக கூறினேன்.
மேலும் இது பற்றி பவானியின் அண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருடன், நானும் சேர்ந்து பவானியை தேடுவது போல் நடித்தேன். பின்னர் பவானியின் அண்ணனுடன் துவாக்குடி போலீஸ் நிலையத்திற்கு நானும் சென்றேன். அங்கு அவர் கொடுத்த புகாரில் என்மீதும் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கி கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான செந்தில்குமார் கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அசோக் நகர் அண்ணா நகரை சேர்ந்தவர் கண்ணன். (வயது 38). இவர் திருகோகர்ணத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி. (35). இவர் காந்திநகர் அரசு பள்ளயில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று தங்களது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் காரைக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர்கள் வீட்டின் உள்ளே உள்ள கதவை பூட்டாமல் வீட்டின் வெளியே உள்ள இரும்பு கேட்டை மட்டும் பூட்டி விட்டு சென்றிருந்தனர். பின்னர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்து கதவு திறந்துக் கிடந்ததை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கத்தோடு, தங்க மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் பின் கணேஷ் நகர் காவல்நிலையத்தில் கண்ணன் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாரிமுத்து (வயது 25), சங்கர் (36).இவர்கள் இருவரும் கந்தர்வக்கோட்டையில் இருந்து கணபதிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ , மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களை பொது மக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் கலெக்டர் கணேஷ் தலைமையில் வருகிற 26 ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.
எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2–வது மாடியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிருத்திகாதேவி நேற்று மதியம் வெளியில் சென்றுவிட்டு மாடி படியில் ஏறிக்கொண்டிருந்த போது திடீரென அலறியபடி கீழே விழுந்தார்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது தலையின் பின்புறம் மற்றும் கழுத்து ஆகிய பகுதியில் படுகாயங்களுடன் கிருத்திகாதேவி கிடந்தார். உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கிருத்திகாதேவியை பரிசோதனை செய்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசிக்கும் தனியார் வங்கி ஊழியர் அசன்முகமது (26) கழுத்தில் காயத்துடன் அங்கு இருந்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அசன் முகமதுவிடம் நடத்திய விசாரணையில், கிருத்திகாதேவியின் அலறல் சத்தம் கேட்டவுடன் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது மர்மநபர் கிருத்திகாதேவியை தாக்கினார். நான் மர்மநபரை பிடிக்க முயன்றபோது, அங்கிருந்த டியூப்லைட்டால் எனது கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் என தெரிவித்தார். இதையடுத்து அசன்முகமது புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
கிருத்திகாதேவியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த பஸ் அறந்தாங்கியை அடுத்த துரையரசபுரம் அருகே உள்ள ஒரு வளைவில் சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து உரமூடைகளை ஏற்றிக்கொண்டு கறம்பக்குடிக்கு வந்த லாரியுடன் நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் தனியார் பஸ் மற்றும் லாரியின் முன்பகுதிகள் அப்பளம்போல் நொறுங்கியது.
இதில் கல்லூரி மாணவிகள் மாதேஸ்வரி 18), தேவிகா (19), சத்யா (20), விஜயராணி (20), காயத்ரி (18), பிரியம்மதா (18), பாண்டி பிரியா (20), அனு (20), தீபா (18), சுமித்ரா (18), ஜுவிதா (18), கவிதா (18), சிவகலா (18), கலையரசி (18), கல்லூரி மாணவர் சண்முகசுந்தரம் (18), பஸ் ஓட்டுனர் ரமேஷ் (30), நடத்துனர் காளிதாஸ் (24), உதவி நடத்துனர் ராஜேஷ் (27), லாரி டிரைவர் முரளிதரன் (28), லாரி உதவியாளர் ஜாகீர் உசேன் (21), பஸ் பயணிகள் இளம்பரிதி (34), மும்தாஜ்பேகம் (40), மாதவன் (49), சேகர் (32), சந்திரா (40), கணேசன் (60) உள்பட 41 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் பாரதிதாசன் பல்கலை கழக மாதிரி உறுப்பு கல்லூரி மாணவிகள் மாதேஸ்வரி (18), விஜயராணி (20), லாரி ஓட்டுனர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முரளிதரன் (30), பஸ் பயணிகள் யோகம்பாள் (46), மும்தாஸ்பேகம் (43), சுந்தரி (38), மங்கையர்கரசி (38), ஆகியோர் 7 மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் வேலாயுதம், வருவாய் கோட்டாச்சியர் ரம்யாதேவி, வட்டாச்சியர்பரணி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறந்தாங்கி அருகே தனியார் பஸ்சுடன் லாரி மோதிய விபத்தில் 41 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அப்போது பட்டா மாறுதல் கோரி 30 மனுக்கள், புதிய குடும்ப அட்டை கோரி 15 மனுக்கள், காவல்துறை நடவடிக்கைக்காக 18 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 14 மனுக்கள், பசுமை வீடு கோரி 28 மனுக்கள், கல்வி உதவித்தொகை கோரி 3 மனுக்கள்,
முதியோர் உதவித்தொகை கோரி 32 மனுக்கள், ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக 15 மனுக்கள் உள்பட 270 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டது. கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிதம்பரம், தனித்துணை கலெக்டர் சூரியகலா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுக்கோட்டை கீரனூர் பள்ளத்துப்பட்டி அண்ணாநகர் நரிக்குறவர்காலனியே சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 120 ஓட்டுகள் உள்ளது. நாங்கள் 4-வது வார்டில் வசித்து வருகிறோம். இதில் 3-வது வார்டில் 16 பேரையும் 5-வது வார்டில் 36 பேரையும் பிரித்து சேர்த்துவிட்டனர். 3-வது மற்றும் 5-வது வார்டில் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் 4-வது வார்டில் வீடு உள்ளது.
எனவே பிரிக்கப்பட்டவர்களை மீண்டும் 4-வது வார்டிலேயே சேர்க்க வேண்டும். இல்லை என்றால் அனைத்து தேர்தலையும் புறக்கணிப்போம் மற்றும் எங்களின் வாக்காளர் அட்டை மற்றும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை அனைத்தையும் திரும்ப ஒப்படைத்துவிடுவோம் என கூறியிருந்தனர்.
இதைப்போல எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த நரிக்குறவர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 42 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் கடந்த 16 ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அமல அன்னை மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் முதல்வர் மரியபுஷ்பம் தலைமை வகித்தார்.
விழாவில் அப்துல்கலாமின் உருவ படத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்துல்கலாமின் சாதனைகள் விளக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆசிரியர்கள் பிரின்ஸ், பாலமுரளி, சலேத் உள்ளி ட்டோர் பங்கேற்றனர். வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அப்துல்கலாம் உருவ படத்திற்கு மலர் தூவி மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்தினர், பள்ளியின் முதல்வர் முருகேசன், மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி புதுக்கோட்டையில் அ.தி.மு.க வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர். திருவப்பூர் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில், சாந்தாரம்மன் கோவில், புவனேஷ்வரி அம்மன் கோவில் ஆகிய கோவிலில் அ.தி.மு.க வினர் மற்றும் பொதுமக்கள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இச்சிறப்பு வழிபாட்டில் மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், தொழில் அதிபர் எஸ்.வி.எஸ். ஜெயக்குமார், நகர்மன்றத் தலைவர் ராஜசேகர், நகரச் செயலாளர் பாஸ்கர், நகர் மன்றத் துணைத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட் மற்றும் அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்-மருத்துவ உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு முகாம் 18.10.2016 (செவ்வாய்க்கிழமை) புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது.
108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் அவசர கால உதவியாளர் பணி இடங்களுக்கான நேர்முகத்தேர்வு 18.10.2016 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி பழைய கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு பெற்றவர்கள் தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் 12மணி நேரம் இரவு பகல் என சுழற்சிமுறையில் பணியாற்ற வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும். ஓட்டுநருக்கான அடிப்படை தகுதிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகனம் ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் இருக்க வேண்டும் 23 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகமாலும் இருக்க வேண்டும்.
ஆண்கள் 162 சென்டி மீட்டருக்கு குறையாமல் உயரம் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தகுதிச் சான்றிதழ் ஓட்டுநர் உரிமம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களும் கொண்டுவர வேண்டும்.
டிரைவர் பணிக்கு வருபவர்களுக்கு எழுத்துத் தேர்வு தொழில் நுட்ப தேர்வு மனித வளத்துறை நேர்கானல் கண்பார்வை சம்மந்தப்பட்ட தேர்வு மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.
மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு ஆண் பெண்கள் விண்ணப்பிக்கலாம் பி.எஸ்.சி. நர்சிங் விலங்கியல் தாவரவியல், மைக்ரோ பயாலஜி அல்லது ஜி.என்.எம் படித்திருக்க வேண்டும் அல்லது ஏ.என். எம். அல்லது டி.என்.ஏ, டி.எம்.எல்.டி 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் அல்லது டி.பார்ம் 3 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் 20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மருத்துவ உதவி பயிற்சியாளர்களுக்கு இ.எம்.டி டெக்னீசியன் மற்றும் டெக்னீசியன் பயிற்சிக்குமான தகுதிகள் ஓராண்டு சான்றிதழ் படிப்பை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்திருக்க வேண்டும். 19 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கு எழுத்து தேர்வு மருத்துவ நேர்முகம் உடற்கூறியல், முதலுதவி பணி தொடர்பாகவும் மற்றும் மனிதவள துறையின் நேர்முக தேர்வுகளும் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி மருத்துவமனை ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
ஓட்டுனர் சம்பளம் 10100, மருத்துவ உதவியாளர் சம்பளம் 10800.
மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2016 நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (17-ந்தேதி) திங்கட்கிழமையன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மனு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.






