என் மலர்
செய்திகள்

கந்தர்வக்கோட்டை அருகே ஆட்டோ மோதி 2 பேர் காயம்
கந்தர்வக்கோட்டை அருகே ஆட்டோ மோதி 2 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மாரிமுத்து (வயது 25), சங்கர் (36).இவர்கள் இருவரும் கந்தர்வக்கோட்டையில் இருந்து கணபதிபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ , மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களை பொது மக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






