என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
- கந்தர்வகோட்டையில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
- பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜி.எஸ்.ரஜினி தலைமை தாங்கினார்
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டையில் தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, கட்சி கொடியேற்று விழா மற்றும் நிதியளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜி.எஸ்.ரஜினி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் நாகமுத்து, பொருளாளர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார். இதில் துணைப் பொதுச் செயலாளர் குணசேகரன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவராஜ், மகளிர் அணி தேன்மொழி, தஞ்சை மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகரச் செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.
Next Story






