என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்றவர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்
    X

    ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்றவர்களை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்றவர்களை விரட்டிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்
    • பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ரேகா. இவர் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது இருசக்கரவாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். நெடுவாசல் அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ரேகா அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது ரேகா கூச்சலிட்டதை தொடர்ந்து இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். எனினும் கிராம மக்கள் விரட்டி சென்று 2 பேரையும் பிடித்து, வடகாடு காவல் நிலையத்தில் ப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் விருதுநனர் மாவட்டம் வளையன்குளத்தை சேர்ந்த மலைசாமி மகன் செல்வேந்திரன் (வயது 29), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் ரஞ்சித்(34) என்பது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×