search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறந்தாங்கி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தம்
    X

    அறந்தாங்கி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தம்

    • அறந்தாங்கி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது
    • பொதுமக்கள் போராட்டத்தால் அதிகாரிகள் நடவடிக்கை

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குருந்திரக்கோட்டை கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இங்கு தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.குடியிருப்பு பகுதியின் மையப்பகுதியில் அமைக்கப்படும் இந்த செல்போன் கோபுரத்தால் பாதிப்பு ஏற்படக்கூடும் என கூறி அப்பகுதி பொதுமக்கள் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் திடீர் சாலை மாறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தியதில் சிறிது காலம் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் சென்று முறையிட்டால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் பிரேம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பணிகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


    Next Story
    ×