என் மலர்
உள்ளூர் செய்திகள்

தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம்
- தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது
- கூட்டம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தவ பாஞ்சாலன் தலைமையில் நடைபெற்றது
கறம்பக்குடி:
புதுக்கோட்டை தி.மு.க. வடக்கு மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் புதுப்பட்டி, பல்லவராயன்பத்தை, மலையூர், கணக்கன் காடு ஆகிய பகுதிகளில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவ பாஞ்சாலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளரும் திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் தலைமை கழக பேச்சாளர் தேவ பாலா கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எஸ்.கருப்பையா, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் கருக்கா குறிச்சி பரிமளம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கருணாநிதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஐயப்பன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.






