என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய டிராக்டர்கள்-பொக்லைன் எந்திரம் பறிமுதல்
- மணல் கடத்திய டிராக்டர்கள்-பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை
இலுப்பூர் அருகே மகுதுப்பட்டி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிகல்யா மற்றும் போலீசார் மகுதுப்பட்டி இன்னாசியர் கோவில் அருகே சத்தன்குளத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீசார் ஆரோக்கியம்பட்டியை சேர்ந்த அன்பரசன், ராப்பூசல் பகுதியை சேர்ந்த ரமேஷ், அடைக்கண், இளங்கோவன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






