என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவன் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா
    X

    சிவன் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா

    • சிவன் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா நடைபெற்றது
    • 18 வகையான மூலிகைகளால் அபிஷேக ஆராதனை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த புகழ்பெற்ற பெரிய நாயகி அம்பாளுடன் உரை அரங்குலநாதர் சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோயில் உள்ளது. கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் திரவிய பொடி உள்ளிட்ட 18 வகையான மூலிகைகளால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்து மூலஸ் தானத்தில் உள்ள சுயம்புலிங்க சிவபெருமான், பெரி யநாயகி அம்பாளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பித்து காலை வாகனத்தில் எழுந்தரு செய்து, பக்தர்கள் சிவ சிவ ஹர ஹர கோசத்துடன் மூன்று முறை பிரகார உலா நடைபெற்றது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபம் காட்டினர்.

    நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் காசிக்கு வீசம் கூட என் று அழைக்கப்படும் திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் திருக்கட்டளை சோம சுந்தரேஸ்வரர் மங்களநாயகம் கோவில் பாழையூர் பழங்கரை புராதன ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது .

    Next Story
    ×