என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டையில் சத்துணவு பேரவை கூட்டம்
    X

    கந்தர்வகோட்டையில் சத்துணவு பேரவை கூட்டம்

    • கந்தர்வகோட்டையில் சத்துணவு பேரவை கூட்டம் நடைபெற்றது
    • சத்துணவு காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

    கந்தர்வகோட்டை,

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கந்தர்வகோட்டை கிளையின் சார்பில் ஒன்றிய பேரவை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் பாஸ்கர் வாசித்தார். சங்கத்தின் வரவு செலவு அறிக்கையை ஒன்றிய பொருளாளர் செல்வகுமார் வாசித்தார். கூட்டத்தில் சத்துணவு காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும், முழு நேர அளவு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், தகுதியானவர்களுக்கு பிற துறைகளில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் அன்பு, மாவட்டச் செயலாளர் சீதாலட்சுமி, மாநில பொருளாளர் மலர்விழி, மனோகரி, கன்னிகா, மாரி கண்ணு, மகேஸ்வரி, விஜயா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×