என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலுப்பூரில் புதிய கூட்டுறவு கடலை ஆயில் மில்
- இலுப்பூரில் புதிய கூட்டுறவு கடலை ஆயில் மில் திறக்கப்பட்டது
- முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூரில் செயல்பட்டு வரும் இலுப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பன்முக சேவை திட்டத்தின் கீழ், கூட்டுறவு கடலை ஆயில் மில் கட்டப்பட்டது.
அந்த புதிய கடலை ஆயில் மில்லினை முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
மேலும் இலுப்பூர் வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் கட்டப்பட்டு புதிய பன்னோக்கு கூட்டுறவு சங்க வளாகம் கட்டுமான பணியினையும் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டார், பின்னர் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறித்தினார்.
தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு நியாய விலைக்கடையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் நியாயவிலைக் கடை உள்ளே சென்று அரிசியின் தரம் மற்றும் எடை அளவு உள்ளிட்டவரை ஆய்வு செய்தார், கைரேகை வைக்கும் மிஷின் சரியான முறையில் செயல்படுகிறதா இல்லையா என்று நியாயவிலைக் கடை ஊழியரிடம் கேட்டறிந்தார்.






