என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம்
- புதுக்கோட்டை நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது
- வரி வசூலில் காட்டும் வேகத்தை ஆக்ரமிப்பு அகற்றுவதிலும் காட்ட வேண்டும் என விஜய் மக்கள் இயக்க உறுப்பினர் பர்வேஸ் பேசினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகரா ட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நடை ப்பெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் தலைமை வகித்தார். துணை த்தலைவர் லியாகத்அலி முன்னிலை வகித்தார். ஆணையர் (பொ) சேகரன் மற்றும் அதிகாரிகள் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். தலைவர் தனது தலைமையுரையில் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கும், புதுக்கோட்டை புதிய பேரூந்து நிலையத்தில் கட்டுமான பணிகளுக்கான ரூ.25 கோடி அரசு ஒதுக்கியதற்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளை தனியார் மூலம் தூய்மை பணிகளை மேற்கொள்ளவிருப்பதால் தூய்மையான நகராட்சியாக மாறும் என்றும் தெரிவித்தார்.விஜய் மக்கள் இயக்க நகர்மன்ற உறுப்பினர் பர்வேஸ் பேசுகையில் அதிகாரிகள் வரி வசூல் செய்வதில் காட்டும் வேகத்தை ஆக்ரமிப்பு அகற்றுவதிலும் காட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.திமுகவை சேர்ந்த காந்திமதிபிரேம்ஆனந்த் பேசுகையில், எனது வார்டுக்கு பல பணிகள் ஒதுக்க ப்பட்டதாக அறிவிப்போடு மட்டும் உள்ளது.
எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. பைப் லைன் கொடுக்கும் ஒப்பந்தகார் யார் எனவே தெரியவில்லை. எனவே கவுன்சிலர்களுக்கு பணிகளை செய்பவர் களை தெரியப்படுத்துங்கள் என்றார்.அதிமுகவை சேர்ந்த செந்தில்குமார் பேசுகையில் கலைஞர் கருணாநிதி அரசு பெண்கள் கல்லூரி எதிரே அமைக்கப்பட்டு வரும் பூங்காவிற்கு சென்ற கூட்டத்தில் கலைஞர் பெயர் வைக்கப்படும் என தெரிவித்தீர்கள். ஆனால் தீர்மானத்தில் கையொப்பம் வாங்கவில்லை. ஆகையால் இந்த கூட்டத்தில் அதை எதிர்க்கிறோம் என்றார். இதே போல் உறுப்பினர் கள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.






