என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்துவது ஏன்- ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்துவது ஏன்- ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

    • புதுக்கோட்டையில் 5-ந்தேதி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்துவது ஏன்-ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்தார்
    • ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்ற தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கியது.

    புதுக்கோட்டை,

    ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உச்ச நீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் முறையான சட்ட வல்லுனர்களை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்ற தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கியது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏதும் இல்லை என்று தீர்ப்பை பெற உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு வருகின்ற 5-ந்தேதி புதுக்கோட்டை அருகே திருச்சி தஞ்சை சாலையில் இடையபட்டி அருகே சிவப்பட்டியில் பிரம்மாண்டமான முறையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்தப் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மேலும் இதில் ஜல்லிக்கட்டு பேரவையினர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளை வளர்ப்பவர்கள் ஜல்லிக்கட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்க உள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாலையீடு அருகே ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பான பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையினர் பங்குபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, பெரியகருப்பன், மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், மெய்யநாதன் ஆகியோரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, ஜல்லிக்கட்டு பேரவை ராஜசேகரன், திருச்சி ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு மக்களின் உள்ளங்களிலும் உணர்வுகளிலும் கலந்துள்ள ஜல்லிக்கட்டை முறையான சட்ட போராட்டம் நடத்தி இனிமேல் தடை ஏதும் வாங்க முடியாத அளவிற்கு தீர்ப்பை பெற்றுக் கொடுத்ததற்காக பாராட்டு விழா நடத்த வேண்டும் என பேசினர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ஜல்லிக்கட்டை மீட்டதாக யார், யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் சரியான நேரத்தில் சரியான முறையில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளின் தீர்ப்பை பெற்று இனி ஜல்லிக்கட்டிற்கு எந்த ஒரு காலத்திலும் தடை வாங்க முடியாத அளவிற்கு வழிவகை செய்துள்ளார். அதனால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

    Next Story
    ×