என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
    X

    மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

    • அமைச்சர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சி தி.மு.க. சார்பில் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு முதலமைச்சரின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், தி.மு.க. மாநில செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்ட்டைன் ரவீந்திரன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசும் போது.கடந்த 10 ஆண்டுகளாக மின் இணைப்பு கேட்டு 4, லட்சத்து 25,000 பேர் காத்திருந்தனர். ஒரு விவசாயிகளுக்குக் கூட இலவச மின்சாரம் கொடுக்க வில்லை. கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு தக்கல் முறையில் பணம் கட்டி காத்திருக்க சொன்னார்கள் ஆனாலும் மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பு ஏற்றார்.அவரது 20 மாத ஆட்சியில் ஒன்னறைலட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி எல்லாருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் சிறந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார் என்றார்.பின்னர் அமைச்சர் ரகுபதி பேசும் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,இந்தியாவில் மாற்றம் வந்தால் தான் மக்களுக்கு நல்ல நிலைமை உண்டாகும். 2024-ம் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 இடங்களையும் ெவன்று மு. க. ஸ்டாலின் இந்தியாவினு டைய பிரதமரை நிர்ணயிக்கக்கூடிய ஒரு சக்தியாக இருப்பார். அது தமிழனுக்கும் பெருமை தமிழ்நாட்டிற்கு பெருமை. அத்தகைய முதலமைச்சர் நாம் பெற்றிருக்கின்றோம்.கடிகாரம் முள்ளுக்கு கூட ஓய்வு கிடைக்கும் ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஓய்வில்லாமல் பல்வேறு பணிகளை செய்து வருகிறார் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×