என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறந்தாங்கியில் சிட்டங்காடு மாயம்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
    X

    அறந்தாங்கியில் சிட்டங்காடு மாயம்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

    • அறந்தாங்கியில் சிட்டங்காடு மாயம்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா சிட்டங்காடு கிராமத்தில் உள்ள மாயம்பெருமாள் கோவில் திருப்பணிகள் முடிவுற்றதை, தொடர்ந்து கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதற்காக 7ம் தேதி அக்னி பிரதிஷ்டையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. 3 நாட்களாக நான்கு கால யாக பூஜை நடைபெற்று வந்தது. யாகசாலை பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம் புறப்பாடு நடைபெற்று, ஆதித்ய பட்டச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேகத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×