என் மலர்
உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
- கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்திற்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன் தலைமை தாங்கினார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வெட்டன் விடுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான தவ பாஞ்சாலன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்எ.ஸ். பாரதி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஆர் எஸ் பாரதி பேசும்போது, கலைஞரின் 80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் அவர் ஆற்றிய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், தமிழகத்திற்கு மத்திய அரசிடம் பெற்றுத் தந்த உரிமைகளையும் எடுத்துக் கூறினார். மேலும் முன்னால் அண்ணா திமுக அமைச்சர்களின் ஊழல்களையும் அதனால் எதிர்காலத்தில் அவர்களுக்கு கிடைக்கப் போகும் தண்டனையையும் எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி துணை தலைவர் கவிச்சுடர் கவிதை பித்தன், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேஸ்வரி, எஸ்.எஸ்.கருப்பையா சந்திரசேகரன், கரம்பக்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மணமடை முத்துகிருஷ்ணன் மாவட்ட மகளிர் அணி தலைவியும் கரம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவரும்மான மாலா ராஜேந்திர துரை அரசு ஒப்பந்தக்காரர் கருக்கா குறிச்சி பரிமளம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தியாக இளஞ்செழியன் நன்றி உரையாற்றினார்.






