என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் கம்பன் விழா முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி
- புதுக்கோட்டையில் கம்பன் விழா முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
- கம்பன் பெருவிழா வருகின்ற 14-ந் தேதி தொடங்கி 23 -ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் சார்பில் 48-ம் ஆண்டு கம்பன் பெருவிழா வருகினற 14-ந் தேதி தொடங்கி 23 -ந் தேதி வரை 10 நாட்கள் கம்பன் கழகத் தலைவரும் , தொழிலதிபர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாநிலம் முழவதிலிருந்தும் சிறப்பு பேச்சாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், பட்டிமன்ற பேச்சாளாகள் என பலர் கலந்துக் கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். தினசரி மாலை நடைப்பெறும் நிகழ்ச்சியில் பல்வேறு இசை மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெறவுள்ளது. இப்பெருவிழாவுக்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நகர் மன்றத்தில் நடைபெற்றது.
கம்பன் கழகத் துணைத் தலைவர்கள் எம் ஆர் எம் முருகப்பன், பேக்கரி மகராஜ் அருண் சின்னப்பா, பொருளாளர் சி.கோவிந்தராஜன், துணைப் பொருளாளர் கரு. ராமசாமி, செயலாளர் ரா. சம்பத் குமார், கூடுதல் செயலாளர் புதுகை ச.பாரதி, இணைச் செயலாளர்கள் காடுவெட்டி குமார், பேராசிரியர் முருகையன், ரா.கருணாகரன், விழா குழு உறுப்பினர்கள் பேராசிரியர் ரவிச்சந்திரன் , நிலவை பழனியப்பன் , காந்திநாதன், ஒப்பந்தக்காரர் கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முத்துக்குமார் குருக்கள் நடத்தி வைத்தார்.






