என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேலப்பட்டு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்
- புதுக்கோட்டை மேலப்பட்டு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது
- ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
அறந்தாங்கி,
சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அதனடிப்படையில் ஒவ்வொரு ஊராட்களிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.மேலப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் அயூப்கான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை எடுத்துரைத்தனர். அதற்கு அதிகாரிகள் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என பதிலளித்தனர். இறுதியாக கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைபிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






