என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கட்டளை குப்பை கிடங்கில் தீ விபத்து
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகராட்சி 42 வார்டுகளை உள்ளடக்கியது. இந்த பகுதியில் தினசரி சேரும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து நகராட்சி குப்பை லாரிகள் மூலம் புதுக்கோட்டை திருக்கட்டளை சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 13.33 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட குப்பை கிடங்கில் குவித்து வைப்பது வழக்கம்.
பின்னர் அங்கு குவித்து வைக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரத்திற்கும், பிளாஸ்டிக் பொருட்களை அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட். டை தீயணைப்புத்துறை வீரர்கள் நகராட்சியினரின் உதவியோடு சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த ஒரு மாத காலத்தி ற்குள் இரண்டாவது முறையாக இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






