என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பிற்படுத்தப்பட்டோருக்கு விலையில்லா சலவை பெட்டிகள்
  X

  பிற்படுத்தப்பட்டோருக்கு விலையில்லா சலவை பெட்டிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிற்படுத்தப்பட்டோருக்கு விலையில்லா சலவை பெட்டிகள் வழங்கப்படுகிறது
  • உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டத்தில் சலவைத் தொழிலில் ஈடுபடும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சார்ந்த மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திட, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் ஆண்டு தோறும் விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சலவை பெட்டிகள் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சார்ந்த சலவை தொழிலை மேற்கொள்பவர்கள், விலையில்லா சலவைப் பெட்டி பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×